காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு முதன்முறையாக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விடுதியொன்று திறக்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாநிலங்களைப் போலவே, பள்ளத்தாக்கில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பான, வசதியாக தங்குவதை உறுதிசெய்து. இந்த பெண்கள் விடுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ‘கட்டடம் கட்டும் பணி தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில், ஈத்காவில் முதன்முதலாக அமைக்கப்படும் இந்த பெண்கள் விடுதியின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதியோர் மட்டுமின்றி பணிபுரியும் பெண்களும் தங்குவதற்கான பல மாடிக் கட்டமாக இது அமைக்கப்படுவதாகவும், இவ்வாறு அமைக்கப்படும் முதல் கட்டிடம் இது என்றும் சமூக நலத் துறையின் துணை இயக்குநர் முகமது அஷ்ரஃப் அகூன் கிரேட்டர் தெரிவித்தார்.
“இது ஒரு நல்ல சிந்தனை. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்காலத்தில் அதிக விடுதிகள் கட்டலாம். கட்டிடத்தின் கொள்ளளவை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த கட்டிடம் பணிபுரியும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் தங்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். கட்டுமானம் முடிந்ததும், அதன் திறனை முடிவு செய்ய முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நகரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு தரமான வாழ்க்கை சூழலை இந்த விடுதி உறுதி செய்யும் என்று அகூன் குறுிப்பிட்டார்.
“காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்காக ஏழு நாரி நிகேதன் இல்லங்கள் உள்ளன. இந்த இல்லங்களில் பெண் குழந்தைகளை பதிவு செய்துள்ளோம். ஆனால் பெண்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறுகிறோம். அவர்களுக்கு நாங்கள் தங்குமிடம் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.
காஷ்மீரில் பெண்கள் வேலை தேடி தங்கள் வீட்டை விட்டு நகரங்களுக்குச் செல்கின்றனர். அத்தகைய பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிரமங்களில் ஒன்று பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடம் இல்லாதது.
பணிபுரியும் ஒரு பெண் நகரத்தில் தனது வேலையைத் தொடர பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடிக் கொள்வது கடினம் என்று கூறினார்.
“சில வாடகை இடங்கள் வசதியாக இல்லை. காஷ்மீரில் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் உண்மையில் ஒரு நல்ல சிந்தனையாகும். பெண்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. என்னைப் போலவே, வசதியும் பாதுகாப்பும் இல்லாத மற்ற பெண்களை நான் அறிவேன்,” என்று பணிபுரியும் அந்தப் பெண் கூறினார்.
மற்றுமொரு பணிபுரியும் பெண் கூறுகையில், இந்த விடுதி பணிபுரியும் பெண்களின் பல பிரச்சனைகளை தீர்க்கும். பெண்களுக்கான தங்குமிடங்களை அரசு கட்டித் தர வேண்டும்.” என்றும் தனது கோரிக்கையை முன்வைத்தார்.