கினிகத்தேனையில் ஆணின் சடலம் மீட்பு! கொலையா என விசாரணை!

கினிகத்தேனை பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதியில் இறந்துகிடப்பதைகண்ட பொதுமகன் ஒருவர், வழங்கிய தகவலையடுத்தே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்திருப்பவர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles