‘கிராம சேவகர் படுகொலை’ – கண்டித்து நுவரெலியாவில் போராட்டம்

அம்பன்பொல தெற்கு பகுதியில் கிராம சேவகரொருவர் படுகொலை செய்யபபட்டதைக் கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (07.10.2021)  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, அம்பன்பொல பொலிஸ் பிரிவில், அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை கண்டித்து மலையகத்தில் சில இடங்களில் கிராம சேவகர்களின் காரியாலயங்களுக்கு முன்பாக கறுப்பு மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிராம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற கருத்துகளை போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles