ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவர் வகித்துவந்த விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனதுறை போன்ற அமைச்சுகள் பறிக்கப்பட்டுள்ளன.
ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில் தான் கொலை செய்யப்படலாம் என குறிப்பிட்டதுடன், ஜனாதிபதிமீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
அத்துடன், ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரச்சினைக்கு இம்முறை முடியாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தீர்வு காணப்படும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டுள்ளார்.










