இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ குழுமம், வீடற்ற ஆறு ஊழியர்களுக்காக புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளதோடு, தற்போதுள்ள 24 வீடுகளை முழுமையாக புதுப்பித்து அவர்களிடம் கையளித்துள்ளது. கிரிஸ்புரோ குழுமத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரஜா அருண பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்புரோ குழுமத்தால் மேற்கொள்ளப்பட்ட 6 முக்கிய சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் பிரஜா அருணா மூலம் கிரிஸ்புரோ தனது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ளது.
இன்றுவரை, பிரஜா அருண திட்டம் 34 புதிய வீடுகளையும், வசதிகள் இல்லாத 84 வீடுகளையும் புனரமைத்துள்ளது.
“வீட்டு மனை என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். தங்கள் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்பது ஒவ்வொருவரினதும் பெரிய கனவு உள்ளது. இந்த தேவைகளை உணர்ந்து, கிரிஸ்புரோ
தனது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டபிரஜா அருண திட்டத்தை அறிமுகப்படுத்தியது, கடந்த ஆண்டு மாத்திரம் 24 உறுப்பினர்களின் வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தது, இதில் ஆறு வீடற்ற கிரிஸ்புரோ குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு குழுமத்தின் பண நன்கொடைக்கு அப்பாற்பட்ட
ஒரு மனிதாபிமான திட்டம்.
பணிப்பாளர் சபையின் ஒப்புதலுக்குப் பிறகு, கிரிஸ்புரோ ஊழியர்கள் கள
ஆய்வு, வீட்டு வசதிக்கான கட்டுமானப் பொருட்கள் வழங்கல், மற்றும் கட்டுமானத்தில் உதவுதல் ஆகிய துறைகளுக்கு தங்களது வலுவான பங்களிப்பை செய்ய முன்வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என கிரிஸ்புரோவின் குழும மனித வள மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி தெரிவித்தார்.
கிரிஸ்புரோ பிரஜா அருண திட்டத்திற்கான நிதி உதவி கிரிஸ்புரோ நலன்புரி சங்கத்தால் வழங்கப்படுகிறது மற்றும் தகுதியான ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பணியாளரின் சேவை நீளம், செயல்திறன், வாழ்க்கைத் தரம் மற்றும் தற்போதைய
வசிப்பிடத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்படுகிறது.
முற்றிலும் உள்ளூர் வர்த்தகக் குழுவாக, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் கிரிஸ்புரோ குழுமம், அதன் ஆறு சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தி வறுமையை ஒழிப்பதில் தொடர்ந்து பங்களிப்பு செய்கிறது. கிரிஸ்புரோ திரி சவிய, பிரஜா அருண, சிசுதரிய, சுவ சக்தி, ஹரித்த சத்கார மற்றும் கிரிஸ்புரோ
நெக்ஸ்ட் சாம்ப் என இந்த சமூக பொறுப்புணர்வு பயணங்களை அறிமுகம்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரிஸ்புரோ திரி சவிய, கிரிஸ்புரோ குழுமத்துடன் இணைந்து, 1,200 நெல் மற்றும் சோள விவசாயிகள் மற்றும் 250 சிறு கோழி பண்ணை உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது. கிரிஸ்புரோவைக் கையாளும் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் தங்கள் உற்பத்திகளுக்கு நேரடி சந்தை விலை வழங்கப்படுகிறது.
கிரிஸ்புரோ சிசுதெரிய திட்டம் சக ஊழியர்களின் குழந்தைகள் உட்பட 6,000 பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குகிறது. மேலும் பல்கலைக்கழக வாய்ப்புகள் அல்லது தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
பசுமை வெப்ப தீர்வுத் திட்டம் என்பது
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இதன் கீழ் நாட்டின் முக்கிய சுற்றுச்சூழல்
மண்டலங்களை குறிவைத்து 5,000 மரக் கன்றுகளை நடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Press Release
“NOCSL-Crysbro Next Champ” புலமைப்பரிசில் திட்டத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, பயணச் செலவுகள், பயிற்சி கட்டணம், தங்குமிட கட்டணம், விளையாட்டு ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி செலவுகள் ஆகியவற்றுக்கு தேவையான செலவுகள் கவனித்துக் கொள்ளப்படும்.
இங்கே, விளையாட்டு வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவார்கள். கிரிஸ்புரோ நிறுவனத்தின்
50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய திட்டம், இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகும், இது நாடு முழுவதிலுமிருந்து மிகவும் திறமையான பாடசாலை விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தி சர்வதேச பதக்கம் வெல்லும் வரை அவர்களை கவனித்துக்கொள்வதாகும்.
புலமைப்பரிசில் திட்டத்திற்கு சமாந்திரமாக “NOCSL-Crysbro Next Champ Web
Portal” இணையத் தள வழிகளின் ஊடாக எவருக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு கிராமப்புற பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் பாடசாலை விளையாட்டு சங்கங்களுக்கு நீதி உதவிகளை வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக
உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும்.
இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும்
இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.