கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை பலப்படுத்துகிறது

இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவனம் செலுத்தும் இந்த நாட்டின் பிரபலமான கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ விதை நெல் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்நாட்டு அரிசி உற்பத்தி அலகை மேம்படுத்துவதற்காக தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் நடத்திச் செல்லும் கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்தி பண்ணை மூலம் இந்த தேசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தற்போது நவீன ஆய்வுக் கூடங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கிரிஸ்புரோ கந்தளாய் சூரியபுர பண்ணையில் அமைத்துள்ளது.

தற்போது இந்த பண்ணையில் BG352, BG358, BG366, BW367, BG300 ஆகிய நெல் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முழுமையான சுற்றாடலுக்கு ஏற்ற மாதிரிகளுக்கு அமைய செயற்படும் கிரிஸ்புரோ சூரியபுர விதை நெல் உற்பத்தி பண்ணைக்குள் மண் மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்காக துரித கவனம் எடுக்கும் வகையிலான உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பண்ணைக்காக பாரிய முதலீட்டையும் கிரிஸ்புரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கிரிஸ்புரோ தற்போது அரிசி மற்றும் சோளம் செய்கை குறித்தும் பெரிய அளவில் கவனம் செலுத்தியுள்ளதுடன் மகியங்கனை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பண்ணைகளில் 10,000க்கும் அதிகமானவர்களுக்கு நேரடி நன்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

30 வருடங்களாக யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் கந்தளாய் சூரியபுர கிராமத்தில் கிரிஸ்புரோவின் முதலீட்டின் மூலம் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பாரிய முன்னேற்றத்தை வென்றெடுக்க முடிந்துள்ளது. இலங்கை அரிசியில் தன்னிறைவு பெற்றது,

ஆனால் விதை நெல்லை பெற்றுக் கொள்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நெற் செய்கையில் இருந்து விலகி பிற உபபயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தும் போக்கை காண முடிகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்ட கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்தியில் இணைந்து விவசாயிகளுக்கு நிவாரண விலையில் விதைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர் “கிரிஸ்புரோ கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யும் காலகட்டத்தில் இங்கு வாழும் பெரும்பாலானோருக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டக் கூடிய சந்தர்ப்பம் இல்லாததுடன் மழை நீரினால் விவசாயத்தை மேற்கொண்டதனால் வருடத்திற்கு ஒரு போகத்திற்கு மாத்திரம் செய்கை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் கிரிஸ்புரோவின் வருகையுடன் இந்த பகுதியுள்ளவர்களுக்கு வாழ்க்கை கிடைத்ததுடன் விதை உற்பத்திக்காக கவனம் திரும்பியதுடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கிரிஸ்புரோ பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டியது. நாட்டின் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது தெரிந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பற்றாக்குறையுடன் உள்நாட்டு உணவு வகைகள் மீது அதிகமாக கவனம் செலுத்தவேண்டி ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த நெருக்கடி காரணமாக உள்நாட்டு உணவின் பாதுகாப்பு குறித்து பாரிய கவனம் செலுத்துவதற்கு முடிந்தது. விதை நெல் உற்பத்தியின் மூலம் உள்நாட்டு அரிசி உற்பத்தி குறித்து அதிகமான பங்களிப்பை செலுத்தி நாம் உணவு பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த தருணமாக இதனை குறிப்பிட முடியும்.” என அவர் தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி ‘vertically-integrated’ தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் தாரக மந்திரமான பண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

 

Related Articles

Latest Articles