” தலவாக்கலை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் அனுமதியின்றி – உரிய பாதுகாப்பு ஏற்பாடின்றி முகாமிட இடமளிக்க வேண்டாம்.” என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜே. அம்பகஹவத்த, லிந்துல காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இப்பெண் ஒருவர் அல்லது சில தரப்பினருடன் மலை உச்சிக்கு வந்திருக்கலாம் எனவும், ஏதேனுமொரு காரணத்தால் அவர் உயிரிழந்த பின்னர், அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் இருந்து இந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவரச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவரும் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு, நானுஓயா நிருபர்