இந்திய சீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய ‘சரிகமப லிட்டில் சம்பியன்’ இசைப் போட்டியில் பங்கேற்று வெற்றி மகுடம் சூடிய இசைக்குயில் கில்மிஷாவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டி, மதிப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி, இன்று மாலை கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி, கலந்துரையாடினார்.
நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக கிஷ்மிஷா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு திரும்பிய பின்னர் கொழும்பில் வந்து தன்னை சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு இதன்போது ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.










