கிளப் வசந்த கொலை: மேலும் இருவர் கைது!

கிளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களும் அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles