கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4,300 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் – என்று கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ். அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டார்கள்.
கடந்த மாதம் ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணம் உட்பட இரண்டு மரணங்களும்,4300ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளார்கள்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 600 நோயாளிகள் இணங்காடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600க்கும் மேற்பட்ட நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 700 க்கும் மேற்பட்ட நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை நகரம்,
உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ்.அருள்குமரன் மேலும் குறிப்பிட்டார்.
