‘குடு நோனி’யின் 10 கோடி பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!

அஹூங்கல்ல பகுதியில் ‘குடு நோனி’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.

04 வீடுகள், 02 படகுகள், சில வாகனங்கள் ஆகியன இன்று காலை குறித்த பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் இன்று காலை குறித்த பகுதிக்கு சென்று சொத்துககளை பொறுப்பேற்றனர்.

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவற்றை பார்வையிடுவதற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்தார்.

 

Related Articles

Latest Articles