குடு ரொஷானின் 550 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!

போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான குடு ரொஷானுக்கு உரியவை எனக் கூறப்படும் சுமார் 550 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

சொகுசு வீடுகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பவவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், அவருக்கு உரித்தான ஏனைய சொத்துகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சகோதரர் ஒருவரின் பெயரிலேயே அவர் சொத்துகளை கொள்வனவு செய்துள்ளார் என தெரியவருகின்றது.

போதைப்பொருள் வியாபாரம் ஊடாக கிடைக்கப்பெற்ற பணத்திலேயே மேற்படி சொத்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரான ‘குடு ரொஷான்” , அவரின் சகோதரன் மற்றும் அவர்களின் மேலும் சில உறவினர்கள் வரக்காபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் காரணமாக இவர்கள் நுவரெலியா பிரதே சத்தில் வீடொன்றை எடுத்து அங்கு தங்கியிருந்துவிட்டு, பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டது என எண்ணி மீண்டும் கொழும்புக்கு வந்துக்கொண் டிருந்தபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles