குட்டி சபைகளில் என்பிபி ஆட்சியமைக்கப்பட்டும்!

கொழும்பு மாநகரசபை உட்பட தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள சபைகளை அக்கட்சியினர் ஆள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” உள்ளுராட்சிசபைத் தேர்தல் முறைமையானது விசித்திரமாக உள்ளது. எனவே, தற்போதுள்ள முறைமை நிச்சயம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்ககூடிய அனைத்து இடங்களிலும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முடிவையே ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழு எடுத்துள்ளது.

எனினும், தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற சபைகளில் அவர்களுக்கு ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அப்போதுதான் அவர்களின் இயலுமை என்னவென்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும்.

இது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் கட்சி எடுத்துள்ள முடிவுக்கே கட்டுப்படுவேன். கட்சி கட்டமைப்புக்குள் இருக்கும்போது கட்சி முடிவை ஏற்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வெளியேற வேண்டும்.

நான் இடதுசாரி அரசியல்வாதி கிடையாது. அநுர தரப்புடன் இணைய வேண்டிய தேவைப்பாடு கிடையாது.” – எனவும் மரிக்கார் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles