உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், தாங்களும் அவ்வாறு களமிறங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
‘ தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே சமல் ராஜபக்சவுக்கு நல்லது. நானும் போட்டியிடமாட்டேன். சுதந்திரக் கட்சி அல்ல எந்த கட்சியிலும் வரமாட்டேன்.
அனைத்து எதிரணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுப்பேன்.” எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.