ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாநகரசபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியும், கம்பஹா மாநகரசபைக்கு மஹிந்த ஜயசிங்கவும், அநுராதபுரம் நகரசபைக்கு முன்னாள் எம்.பி. வசந்த சமரசிங்கவும் போட்டியிடுகின்றனர்.
குட்டி தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 340 உள்ளாட்சிமன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகின்றது.
