நுவரெலியா மாநகரசபைக்கு உட்பட்ட பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் கொல்ப் கிளபிற்கு அருகில் காணப்படும் ஓய்வு பூங்காவே இது.
இப் பூங்காவில் உள்ள சில பகுதிகள் ஆங்காங்கே உடைந்து சிதைவடைந்து காணப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் நுவரெலியா மாநகர சபைக்கு பொறுப்பானதாக இருக்கின்ற போதும், கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய விடயமே.
ஓய்வு பூங்காவினை நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், நாளாந்தம் தங்கள் தேவைகளுக்காக நுவரெலியா மாநகரத்திற்கு வரும் மக்களும் பயன்படுத்திவருகின்றனர்.
நுவரெலியா நகரத்தின் அழகினை மேலும் அதிகரிப்பதற்றாக மக்கள் பணத்தை செலவு செய்து அமைக்கப்பட்ட இவ்வாறான செயற்திட்டங்களை பராமரிக்க வேண்டியது மாநகர சபையின் கடமையாகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது நுவரெலியா மாவட்டத்துக்கு சுற்றுலா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியில் வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தியேனும் பூங்காவை புனரமைப்பதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்