கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா நகலில் இருந்து நுவரெலியாவுக்கு செல்லும் பிரதான பாதையில் டன்சினன் தோட்டத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையத்தை டன்சினன் தோட்டம் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும், தோட்ட மக்களும் நாளாந்தம் பாவித்து வருகின்றனர்.
தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் பாதிக்கபட்ட நிலையில் சுற்றுபுரங்களும் கும்பைளினால் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும் இது வரைக்கும் புனரமைப்பு பணி இடம்பெறவில்லை.
குறிப்பாக பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் இந்த பிரதான பாதையின் அதிகளவிலான பகுதிகள் பாதிக்கபட்டு குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வேதனைக்குறியது. மழை காலங்களில் எந்த ஒரு பயணியும் இந்த பஸ் நிலையத்திற் நிற்க கூட முடியாது.
இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப் பிரதேச பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்