குரங்கு அம்மைப்” பெயரை மாற்ற சுகாதார அமைப்புக்குப் பரிந்துரை

மங்கிபொக்ஸ் (monkeypox) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற வைரஸின் பெயரை மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“பாரபட்சம்” மற்றும் “இழிவுபடுத்தும்” விதமான பெயர் குறியீட்டை மாற்ற வேண்டியது அவசர தேவையாகும்

என்று ஆபிரிக்கா உட்பட சில நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று உலக சுகாதார அமைப்பிடம் கேட்டுள்ளது.

குரங்கு வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து பரவுவதாக நோயுற்ற ஆபிரிக்கச் சிறுவர்களது படங்களுடன் உலகின் பிரதான  ஊடகங்களில் செய்திகள்

பகிரப்படுவது பாரபட்சமானது, இழிவுபடுத்தும் விதமானது என்று ஆபிரிக்க நாட்டுத் தொற்று நோய் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதில் இனப் பாரபட்சமும் இருப்பது போலப்படுகிறது என்று ஆபிரிக்கத் தொற்று நோய் நிலையத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய தொற்று நோய் ஒன்றுக்கு புவியியல் ரீதியான அல்லது விலங்குகள், இனம், நாடு போன்ற அடையாளத்தைக் குறிக்கின்ற பெயர் இடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கொரோனா பெரும் தொற்றுநோய் ஆரம்பித்த சமயத்தில் அது சீன வைரஸ் என்றும் வுஹான் வைரஸ் என்றும் வெவ்வேறுவிதமான  பெயர்களில் அழைக்கப்பட்டமை பலவித விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர்

சுகாதார அமைப்பு அதற்கு “கோவிட் – 19” என்று அறிவியல் பெயரைச் சூட்டியது.

கொரோனா வைரஸின் திரிபுகளுக்குக் கிரேக்க இலக்கங்களைக் குறிக்கும் பெயர்கள் இடப்பட்டு வருகின்றன.  பெரியம்மை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை அதற்கான தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்பாக உலகில் பல லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்தது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் பருவ மழைக் காடுகளில் எலிகள், மர அணில்கள் உட்பட பல விலங்குகளில் அந்த வைரஸ் காணப்பட்ட போதிலும் அதற்குக் குரங்கு அம்மை(monkeypox) என்ற பெயர் எவ்வாறு வந்தது?

1958 இல் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்பாக டென்மார்க்கின் பரிசோதனைக் கூடங்களில் முதலில் குரங்குகளிலே கண்டறியப்பட்டது என்றும் அதன் காரணமாகவே அது குரங்கு வைரஸ் எனப் பெயர் பெற்றதுஎன்றும் சொல்லப்படுகிறது.

பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட குரங்கு அம்மை நோய் கடந்த மாதம் உலகின் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இதுவரை உலகெங்கும் ஆயிரத்து 300 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles