மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குருக்கள்மடம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,நீதிமன்ற உத்தரவைப் பெற்று சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதோடு, சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










