குருநாகலில் கால்வாயில் சிக்கிய மாணவன் உயிரிழப்பு

குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

வீதியில் சென்ற வாகனத்தை விலத்த முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே பாடசாலை புத்தகப் பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குருநாகல் பொலிஸாரும் , இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles