குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு: ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை – தண்ணிமுறிப்புப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர்மலை பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அபகரிப்புக்கு எதிராகவும் இங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நில அளவீட்டுக்கு எதிராகவும் நாளை 21 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு தண்ணிமுறிப்பு கிராம மக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.மயூரன், தண்ணிமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கலைச்செல்வன், தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் ச.சசிகுமார் ஆகியோர் கூட்டாக நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles