நாட்டில் குறுகிய காலத்துக்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலைச் சபை விசேட வேலைத்திட்ட மொன்றை ஆரம்பித்துள்ளது.
தேயிலைத் தூள்களின் தரத்தை அதிகரித்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்கென இந்த வேலைத்திட்டம்இலங்கை தேயிலைச் சபை விசேட செயற்திட்டம்அமுல்படுத்தப்படுவதாக தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் தேயிலை உற்பத்தி படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.
தேயிலை கொழுந்தின் தரமின்மையே பிரதான காரணம் எனவும், உரங்கள் மற்றும் காலநிலை காரணிகளும் இதற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது. ஏழு நாட்களுக்குள் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். இவ்வாறில்லாது, 14 நாட்களுக்குப் பிறகே கொழுந்துகள் பறிக்கப்படுகின்றன. இதனால்,தேயிலை உற்பத்தியின் தரம் குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தேயிலை உற்பத்தியாளர்கள், கொழுந்து விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் ஒருமுறை தேயிலை உற்பத்தியை உகந்த மட்டத்துக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.










