போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்ட சுமார் 600 கோடி ரூபாவை 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவரே, நிதிச் சலவை சட்டத்தின் கீழ் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண்ணுக்கு சொந்தமான வங்கி கணக்கில் 600 கோடி ரூபா இருந்துள்ளது எனவும்,
இந்த தொகையானது, கடந்த 4 வருட காலப் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்ட நபர்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.