குற்றவாளிகள் தப்பவே முடியாது! பிள்ளையானிடம் விசாரணை வேட்டை தீவிரம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு தொடர்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்நாட்டில் இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். இது தொடர்பில் ஏற்கனவே சபைக்கு அறிவித்தும் உள்ளோம். இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் அல்ல, வேறு வலுவான மூன்று சட்டங்களைக்கொண்டுவந்து அவற்றை நிச்சயம் ஒடுக்குவோம்.

முன்னாள் பிரதி அமைச்சர் பிள்ளையான் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பிலும் விசாரிக்கப்படுகின்றது.

எனவே, நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு குற்றச்செயலையும் மூடிமறைக்க நாம் இடமளிக்கமாட்டோம். குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது. சட்டம், நீதி உரிய வகையில் நிலைநாட்டப்படும். அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles