நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற சிறார்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதில் பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சிவபொருமாள் தில்ஷான் (16) என்பவர் உயிரிழந்துள்ளார். ஏனையோர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
மூவர் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவரும் நிலையில், ஏனைய மூவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த சிறுவன் குளவி கொட்டும் போது தப்பித்து ஓடுவதற்கு முயன்று தடுக்கி விழுந்து இடத்திலேயே கடுமையான குளவி கொட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் , சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
டி.சந்ரு செ.திவாகரன்
