கருங்குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். கொடிகாம வீதி, புலோலி தெற்கைச் சேர்ந்த கண பதிப்பிள்ளை அன்னபூரணம் (வயது 83 ) என்பவராவார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பனையால் விழுந்த கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் பல அவரைக் கொட்டிய நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற் கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
