லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் – யப்பாம தனியார் தோட்டமொன்றுக்கு தொழிலுக்குச் சென்ற 53 வயதுடைய நபர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு பின்னர், ஹொப்டன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 53 வயதுடைய லுணுகலை ஹொப்டன் பங்களோ பிரிவைச் சேர்ந்த நபர் எனவும் மரணித்த நபரின் சடலம் ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.