குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நானுஓயா கிரிமிட்டி பகுதியிலேயே இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கூட்டை கழுகு காத்திய நிலையில், குளவிகள் கலைந்து தேயிலை தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த அவரை தாக்கியுள்ளன.
இதில் நானுஓயா கிரிமிட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜா லெட்சுமி என்ற 78 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வி.தீபன்ராஜ்










