பெண் பொலிஸார் விடுதியின் குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபலை , மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா நாணயக்காரவால் குறித்த உத்தரவு (04.07.2024) நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது.
லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை , அதே பொலிஸ் நிலையத்தில் கொஸ்தாபல் பதவி வகிக்கும் ஆண் பொலிஸ் கொஸ்தாபல் தனது ஸ்மார்ட் போனால் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கொஸ்தாபல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த நபரை கைது செய்த லிந்துலை பொலிஸார், அவரை நேற்று (04.07.2024) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதன்போது இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார , சந்தேக நபரான பொலிஸ் கொஸ்தாபலை இம்மாதம் (09.07.2024) செவ்வாய் கிழமை வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஆ.ரமேஷ்