தசை புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது.
இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த நோயைப் பற்றி அவ்வளவாக மக்கள் கேள்விபட்டிருக்க மாட்டார்கள்.
அந்த புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றை அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற முடியும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் இந்த நோயிலிருந்து நாம் குணமடையலாம். இந்த வகை புற்றுநோயை ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ராபடோமியோசர்கோமா புற்றுநோய் :
இது ஒரு வீரியமிக்க புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயால் தசை செல்களில் கட்டிகள் உருவாகும். பின்னர் தசை செல்கள் படிப்படியாக வீங்கும்.
பொதுவாக 19 வயதிற்குட்பட்டவர்களை இந்த புற்றுநோய் தாக்கும்.
ரப்டோமியோசர்கோமா தசை திசுக்களில் உள்ள உயிரணுக்களில் உருவாகும்.
புற்றுநோய் உருவாகும் இடங்கள்
தலை மற்றும் கழுத்து பகுதி. குறிப்பாக தொண்டைக்குள் அல்லது கழுத்தின் முதுகெலும்புக்கு அருகில்.
சிறுநீர்ப் பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் உருவாகிறது.
கை மற்றும் கால்கள், மார்பு, அடிவயிறு பகுதியில் வேண்டுமானாலும் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம்.
புற்றுநோயின் காரணங்கள்
இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
உயிரணுக்களின் டி. என். ஏ வில் ஏற்படும் சில மாற்றங்களினால் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகிறது.
புற்றுநோயின் அறிகுறிகள்
- கடுமையான தலைவலி.
- கண்களில் கொப்புளங்கள் உருவாகும் மற்றும் வீக்கம் ஏற்படும்.
- மூக்கு, தொண்டை மற்றும் காதுகளில் இருந்து இரத்தம் வரும்.
- சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வரும்.
- பெண்ணுறுப்பு பகுதியில் அல்லது மலவாய் பகுதியிலும் இரத்த போக்கு உண்டாகும்.
புற்றுநோயின் வகைகள்
இந்த ராபடோமியோசர்கோமா மூன்று வகைப்படும்.
புருன், அல்வியோலர், அனாபிளாஸ்டிக் ஆகும்.
சிகிச்சை முறை
ராபடோமியோசர்கோமாவை குணப்படுத்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாளான கட்டிகளை கட்டுப்படுத்த முடியும்.
கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும்.
கதிர்வீச்சு சிகிச்சைகள் புற்றுநோய் கட்டிகளின் வீரியத்தை குறைத்து சுருக்க கதிர்வீச்சு சிகச்சைகள் செய்யப்படும்.
ஹீமோதெரபி சிகிச்சைகள் இந்த தசை செல் புற்றுநோயை போக்க ஹீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் கட்டிகளை 80 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது.