யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30 இற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பட்டா ரக வாகனம் ஒன்றும், ஆட்டோவொன்றும் இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
		
                                    









