கூகுள் நிறுவனத்துக்கு பாரிய தொகை அபராதம்

அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது.
யூடியுப் காணொளி ஒன்றின் ஊடாக அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஜோனுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக தெரிவித்து 515000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சமஷ்டி நீதிமன்றம் இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரதி முதல்வராக கடமையாற்றி வரும் ஜோன் பாரிலாரோவிற்கு எதிராக காணொளி வெளியிடப்பட்டிருந்தது.

இந்தக் காணொளிகளின் காரணமாக ஜோன், தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காணொளி சுமார் 800,000 தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாம் பணத்திற்காக இந்த வழக்கைத் தொடரவில்லை எனவும், நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதனையும், காணொளி அகற்றப்பட வேண்டும் என்பதனையும் முன்னிறுத்தி தாம் இவ்வாறு வழக்குத் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles