ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து முக்கிய இரு புள்ளிகளை களமிறக்கியுள்ள ரணில்!

ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில், முக்கியமான சில பதவிகளை உருவாக்கி அதற்கு உறுப்பினர்களையும் நியமித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முகாமையாளராக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள கூட்டணியின் ஏற்பாட்டாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்கும், கட்சிகளை இணைத்துக்கொள்வதற்குமான முழுமையான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழுவிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles