எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை அறிவித்தார்.