கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் – அதுவே விமோசனம்! ராதாகிருஷ்ணன்

” கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே மலையக மக்களின் நிலைப்பாடு. அதுவே மக்களுக்கு விமோசனமாக அமையும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையில் மிக முக்கியம் இந்த சம்பளம் பிரச்சினை. சம்பள உயர்வு இன்மையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூட்டு ஒப்பந்தமா, சம்பள நிர்ணய சபையா என்ற வாதம் ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை கூட்ட ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவே மக்களுக்கு விமோசனமாக இருக்கும்.

கடந்த காலங்களில் நாம் கூட்டு ஒப்பந்தத்தை விமர்சித்திருக்கலாம். ஆனால் கடந்த 3 வருடங்களாக மக்கள் துன்பங்களை எதிர்கொண்டனர். கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படுகின்றன. எனவே ,கூட்டு ஒப்பந்தம் அவசியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles