கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டு ஒப்பந்தத்தை சிலர் அடிமை சாசனமென விமர்சித்தனர். நாம் அதிலிருந்து வெளியேறினோம். மாற்று தொழிற்சங்கங்கள் என்ன செய்யுமென அவதானித்தோம். அவர்கள் அரசியல் நடத்தினார்களோதவிர, தொழிற்சங்க நடவடிக்கைகளில், தொழிலாளர்களின் நலனுக்காக அக்கறை காட்டவில்லை. எனவே, தொழிற்சங்க நடவடிக்கையில் இ.தொ.கா. தற்போது முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளது.

Related Articles

Latest Articles