காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆறுமுகம் ரவிகுமார் (வயது -42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்