அரசாங்கத்தில், அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு வெளியேறவேண்டிய தேவையேற்படின், தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளியேற நினைக்கும் கட்சிகளை பலவந்தமாக தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
” பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டுள்ளன. எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் தற்போது அரசாங்கத்தின் இடத்தில் செயற்பட்டிருந்தால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கி சென்றிருக்கும்” – எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.