போலி மருந்து கொடுக்கல் வாங்கல் குறித்தான வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 பேர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை வேனிலும், ஏனைய சந்தேகநபர்கள் சிறைச்சாலைகள் பஸ்ஸிலும் அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன், போலி மருந்துகள் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட அறிகுறிகள், இறப்புகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் அனுமதி கோரப்பட்டது.
இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
