கெஹலிய குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் முடக்கம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியார் வங்கி கணக்குகள் சிலவற்றை 03 மாதங்களுக்கு முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காப்புறுதி பத்திரங்கள் சிலவும் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குகின்றன.

இவற்றின் பெறுமதி 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

Related Articles

Latest Articles