கேகாலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21, 937 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (17ஆம் திகதி) மாத்திரம் 24 மாவட்டத்தில் 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரெ நாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகப்படியான தொற்றாளர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டமை மேலும் அச்சநிலையை தோற்றவித்துள்ளது.
17ஆம் திகதி இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் கேகாலை சுகாதார அதிகாரி பிரிவில் 62பேரும், ரம்புக்கன சுகாதார அதிகாரி பிரிவில் 42பேரும், மாவனல்லை சுகாதார அதிகாரி பிரிவில் 85பேரும், அரனாயக்க சுகாதார அதிகாரி பிரிவில் 07பேரும், கலிகமுவ சுகாதார அதிகாரி பிரிவில் 48பேரும்,
வரக்காபொல சுகாதார அதிகாரி பிரிவில் 20பேரும், புளத்கோபிட்டிய சுகாதார அதிகாரி பிரிவில் 73பேரும், ருவன்வெல்ல சுகாதார அதிகாரி பிரிவில் 116பேரும், எட்டியாந்தோட்டை சுகாதார அதிகாரி பிரிவில் 37பேரும், தெஹியோவிட்ட சுகாதார அதிகாரி பிரிவில் 17பேரும், தெரணியகலை சுகாதார அதிகாரி பிரிவில் 13பேரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், வைரஸ் தொற்றியவர்களில் 19,251 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது 7,188 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் அபாய நிலையை கருத்தில் கொண்டு குறிப்பாக தெரணியகலை நகரத்தில் 18ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாபார நிலையங்களை மூடுவதற்கு தெரணியகலை வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.
அதேப்போல் ருவன்வெல்ல நகரமும் 19ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதி வரை கடைகளை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
