நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என்று லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சமையல் எரிவாயுவை பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மேற்படி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
