நாட்டில் இன்று முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 4,250 ரூபாவாகும்.
5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,707 ரூபா.
அத்துடன், 2.3 கிலோ சமையல் எரிவாயுவிலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 795 ரூபா.