உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் ஜனாதிபதி நாளை (21) வெளியிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் அவற்றை நான் வெளியிடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார்.
” ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தயங்குகின்றார் ,அந்;த அறிக்கைகளை வெளியிடுவதற்காக நான் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடு நாளை காலை 10 மணியுடன் முடிவடைகின்றது.” எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னை கைது செய்தால்கூட, நவீன தொழில்நுட்பம் ஊடாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
