மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் , நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவரை கைது செய்வதற்கு நேற்று ககேய பகுதிக்கு சென்ற போது குறித்த நபர் கூறிய ஆயுதத்தில் தாக்கியதில் பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தர்மதாச ( 34177) என்ற 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
மஹியங்கனை சொரபொர வீதி ககேய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை கைதுசெய்ய சென்ற போது சந்தேக நபர் கூறிய ஆயுதத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எஸ். பலிபான ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன தலைமையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
