சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி, மே 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்தின் முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவர்.










