காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இருவரும் போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர், இஸ்ரேல் பிரதமர், டிரம்ப் இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப் ‘ தேவைப்பட்டால் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் எங்கள் நாட்டு இராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்.

இது மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்கும். காசா பகுதியில் உள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்றுவோம். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை உருவாக்குவோம்.” -என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி டிரம்பின் இந்த யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்று. காசாவிற்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறார். மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles