கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றி வீசப்பட்ட குழந்தை

ஆனமடுவ – திவுல்வெவ பிரதேசத்தில் காணாமல் போன 4 வயது குழந்தை, உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தை நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற நிலையில், கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles