நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை முன்பாக (12.03.2024) மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“ வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரம் ரூபா எமக்கும் எமக்கும் வழங்கப்பட வேண்டும்.” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். “ எமது இந்த கோரிக்கை தொடர்பில் அரசும், சுகாதார அமைச்சும் இழுத்தடிப்பு செய்கின்றன. இனியும் இழுத்தடிப்பு செய்யாமல் தீர்வை வழங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினர்.
ஆ.ரமேஷ், நானுஓயா நிருபர்