‘கொடும்பாவியை எரித்தாலும் கொள்கை மாறாது’ – மஹிந்தானந்த திட்டவட்டம்

” எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன்கருதியே இரசாயன உரப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பசுமை விவசாயத்துக்கான அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இரசாயன உரம் கோருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம். கொடும்பாவிகளை எரிக்கட்டும், அஞ்சி பின்வாங்க தயாரில்லை.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles